பேராசிரியர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார் செந்தில் பாலாஜி

 

பேராசிரியர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார் செந்தில் பாலாஜி

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை: திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளராகவும், டிடிவி தினகரனின் வலதுகரமாகவும் இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல்  12 மணிக்கு மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  திமுகவில் இணைந்தார். 

அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து அவர் கௌரவித்தார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, முக ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் திமுகவில் இணைந்தேன் என கூறினார். இந்நிலையில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசியர் க.அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.