பேரழிவை ஏற்படுத்தி வரும் கனமழையில் போட்டோஷூட் நடத்திய பீகார் கல்லூரி மாணவி! வைரலான போட்டோக்கள்

 

பேரழிவை ஏற்படுத்தி வரும் கனமழையில் போட்டோஷூட் நடத்திய பீகார் கல்லூரி மாணவி! வைரலான போட்டோக்கள்

பீகாரில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கனமழையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்திய பேஷன் டெக்னாலஜி மாணவியின் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.

பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடும் சோகத்தில் ஆழந்துள்ளனர். இந்த நேரத்தில் பாட்னாவில் தேசிய பேஷன் டெக்னாலஜி பயிலகத்தில் படித்து வரும் மாணவி அதிதி சிங்கை சவுரப் அனுராஜ் என்ற போட்டோகிராபர் விதவிதமாக கொட்டும் மழையில் வித்தியாசமான போஸ்களில் புகைப்படம் எடுத்தார். 

அதிதி சிங்

மேலும், பேரழிவில் தேவதை என அந்த போட்டோக்களுக்கு தலைப்பு கொடுத்து அவற்றை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சவுரப் அனுராஜ் பகிர்ந்து உள்ளார். பீகாரின் தலைநகர் பாட்னாவின் தற்போதைய நிலையை  இந்த  புகைப்படங்கள் வித்தியாசமான வழியில் வெளிப்படுத்கிறது. பாட்னாவின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதுதான் இந்த போட்டோ சூட். இதனை தவறான அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டாம் என பேஸ்புக்கில் பதிவு செய்து இருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இன்டெர்நெட்டில் வைரலாகி உள்ளது.

அதிதி சிங்

மாணவியின் புகைப்படம் இயற்கை பேரழிவுக்கு புகழ்பாடுவது போல் உள்ளதாகவும், இது மலிவான விளம்பர தேடல்  எனவும் சிலர் கடுமையாக தாக்கி கருத்து பதிவு செய்துள்ளனர். அதேசமயம் புகைப்படங்களை பாராட்டியதுடன் அந்த கருத்தை பாராட்டுவதாகவும் பதிவு செய்து இருந்தனர்.