‘பேய் மாமா’ படத்திலிருந்து நீக்கப்பட்ட வடிவேலு: அவருக்கு பதில் இவர்தான்!

 

‘பேய் மாமா’  படத்திலிருந்து நீக்கப்பட்ட வடிவேலு: அவருக்கு பதில் இவர்தான்!

நடிகை  வடிவேலு  நடிக்கவிருந்த பேய் மாமா படத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். 

நடிகை  வடிவேலு  நடிக்கவிருந்த பேய் மாமா படத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். 

vadivelu

எலி  படத்தில்  கடந்த 2015 ஆம் ஆண்டு நாயகனாக நடித்திருந்த நடிகர் வடிவேலு, அதன் பிறகு கத்தி சண்ட, சிவலிங்கா, மெர்சல் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே சிம்புதேவன் இயக்கும், இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் அவர் நடிக்க இருந்தார். இயக்குநர் ஷங்கரும் லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்காகப் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பிரச்னைகள் காரணமாக வடிவேலு இந்தப் படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தாராம். 

pei mama

இது நடந்த போது செட் வாடகை கோடியை தொட்டிருந்தது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஷங்கர் வடிவேலு மீது புகார் கொடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, சங்கத்தினரோ அப்போது தான் விபரீதம் புரிந்து வடிவேலு மீது ரெட் கார்டு போட முடிவுக்கு வந்ததுள்ளனர். இதனால் அவர் படங்களில் நடிக்காமலிருந்தார். இன்றுவரை தமிழ் சினிமாவில் தீர்க்கமுடியாத பஞ்சாயத்தாக மாறியிருக்கிறது வடிவேலு நடித்து பாதியில் நிற்கும் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரம். 

இதையடுத்து  இங்லீஷ்காரன், கோவை பிரதர்ஸ் படங்களை இயக்கிய இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால்  இதுகுறித்து எந்த அப்டேட்டும் எட்டவில்லை.

pei mama

இந்நிலையில் பேய் மாமா படத்தில் வடிவேலுக்கு பதிலாக யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது குமுளியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இயக்குநரும்  நடிகருமான ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.