பேப்பர் இல்லாத டிக்கெட், பிளாஸ்டிக் இல்லாத உணவு பொருட்கள் – அசத்தும் மதுரவாயல் ஏ.ஜி.எஸ் சினிமாஸ்!

 

பேப்பர் இல்லாத டிக்கெட், பிளாஸ்டிக் இல்லாத உணவு பொருட்கள் – அசத்தும் மதுரவாயல் ஏ.ஜி.எஸ் சினிமாஸ்!

மதுரவாயல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிர்வாகம் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என்று தீர்மானித்துள்ளது.

சென்னை: மதுரவாயல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிர்வாகம் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என்று தீர்மானித்துள்ளது.

சென்னையில் வில்லிவாக்கம், தி.நகர், நாவலூர் ஆகிய இடங்களில் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் திரையரங்குகளை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த கிளையாக மதுரவாயல் பகுதியிலும் புதிதாக திரையரங்கை திறந்துள்ளது. அதன் முதல் திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படம் திரையிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த திரையரங்கில் பேப்பர் இல்லாத டிக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத உணவுப் பொருட்களை கையாள நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. மக்களை மீண்டும் இயற்கை பொருட்கள் பக்கம் திருப்பும் வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏ.ஜி.எஸ் சினிமாஸ் ‘கோ க்ரீன் இனிஷியேட்டிவ்’ (The Go Green Initiative) என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. இதற்கு சினிமா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. விரைவில் மற்ற ஏ.ஜி.எஸ் திரையரங்குகளிலும் இந்த நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என்று ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.