பேனர் கிழிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: டிடிவி தினகரன் விளக்கம்

 

பேனர் கிழிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: டிடிவி தினகரன் விளக்கம்

பசும்பொன்னில் நடந்த பேனர் கிழிப்புக்கும் அமமுகவுக்கும் சம்பந்தமில்லை என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்திருக்கிறார்.

சென்னை: பசும்பொன்னில் நடந்த பேனர் கிழிப்புக்கும் அமமுகவுக்கும் சம்பந்தமில்லை என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்திருக்கிறார்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களை வரவேற்று அதிமுகவினர் ஏராளமான பேனர்களை வைத்தனர். ஆனால் அந்த பேனர்கள் சிலரால் கிழிக்கப்பட்டது. பேனர்களை கிழித்தது அமமுகவினர்தான் என அதிமுக தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவினர் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்திதார். அப்போது அவர் பேசுகையில், பேனர் கிழிப்பிற்கும் அமமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக நாங்கள் நீதிமன்றம் செல்வோம். திமுக தலைவர் ஸ்டாலினை நான் ரகசியமாக சந்திக்கவில்லை என்றார்.