‘பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சுபஸ்ரீ ஆன்மா சாந்தியடையும் என்று நம்பினோம்’ : சுபஸ்ரீ தாய் வேதனை!

 

‘பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால் சுபஸ்ரீ ஆன்மா சாந்தியடையும் என்று நம்பினோம்’ : சுபஸ்ரீ தாய் வேதனை!

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் வருகை புரியவுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக பேனர் வைக்க வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள் என்று என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

பிரதமரை வரவேற்க வைக்கப்படும் பேனரால்,  பேனர் கலாச்சாரம்  தொடர வாய்ப்புள்ளதாக சுபஸ்ரீயின் தாய் கீதா வருத்தம் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 13 ஆம் தேதி  சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது  அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர சம்பவம் அங்கிருந்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது. இந்த விவகாரத்திற்குப் பிறகு திமுக, அதிமுக ஆகிய தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளும், நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

modi

இதையடுத்து முறையான அனுமதி இல்லாமல் பேனர் வைக்க யார் உங்களுக்கு அனுமதி வழங்கியது என உயர்நீதி மன்றம் மாநில அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தது. இதனால் பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் ஒழிந்து விட்டது என நிலை ஏற்பட்டது. 

இருப்பினும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்குப் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் வருகை புரியவுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதமாக பேனர் வைக்க வேண்டும். அதற்கு அனுமதி தாருங்கள் என்று என்று அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.  மக்களுக்கு இடையூறு இன்றி  மக்களுக்கு இடையூறின்றி பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

hc

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுபஸ்ரீயின் தாய் கீதா , தமிழக அரசின் முடிவால் பேனர் கலாச்சாரம் தொடர வாய்ப்புள்ளது. பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எண்ணினோம். சுபஸ்ரீ ஆன்மா சாந்தியடையும் என்றும் அவரது மறைவே இறுதியாக இருக்கும் நம்பினோம்.   தற்போது அது கேள்விக்குறியாக மாறியுள்ளது.   பேனர் வைத்துத்தான் பிரதமரை வரவேற்க வேண்டுமா?’ என்றார்.