பேட்மேனாக நடிக்கும் பிரபல நடிகையின் கணவர்?

 

பேட்மேனாக  நடிக்கும் பிரபல நடிகையின் கணவர்?

பேட்மேன் பட வரிசையின் அடுத்த படத்தில் பாலிவுட்  நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை: பேட்மேன் பட வரிசையின் அடுத்த படத்தில் பாலிவுட்  நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் ஹீரோவாக நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹீரோ படங்களில் பேட்மேனுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதனாலேயே 13-க்கும் மேற்பட்ட பேட்மேன்வரிசை படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வெளியாக இருக்கின்றன. வசூலிலும் இந்தப் படங்கள் தொடர்ந்து சாதித்து வருகின்றன. 

ben

இந்நிலையில் பேட்மேன் பட வரிசையில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும், பாப் பாடகரான  நிக் ஜோனாஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான ஜஸ்டிஸ் லீக்,  பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் ஆகிய படங்களில் பேட்மேனாக நடித்த  பென் அஃப்லெக் பேட்மேன் அடுத்த படத்தில் நடிக்க மறுத்ததால்  நிக் ஜோனாஸுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

priyanka

பேட்மேன் அடுத்த படத்தில் யார் நடிக்கலாம் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த நிக் ஜோனாஸ், முதல் பெயர் நிக், கடைசி பெயர் ஜோனாஸ் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.