பேட்ட Vs விஸ்வாசம்: கொல காண்டுல இருக்கும் ரஜினிக்கு கொல கோவத்துல பதில் சொன்ன அஜீத் – வைரல் வீடியோ

 

பேட்ட Vs விஸ்வாசம்: கொல காண்டுல இருக்கும் ரஜினிக்கு கொல கோவத்துல பதில் சொன்ன அஜீத் – வைரல் வீடியோ

பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சென்னை: பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படமும்,தல அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பேட்ட திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 28-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதே போல் தல அஜீத் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இரு திரைப்படங்களின் ட்ரெய்லரில் இடம் பெற்றிருக்கும் வசனங்களை  ரஜினிகாந்த் vs அஜீத்குமாராக ரசிகர்கள் மாற்றி இருக்கின்றனர். அதன்படி, பேட்ட ட்ரெய்லரில், எவனுக்காவது பொண்டாட்டி குழந்தை குட்டினு சென்ட்டிமெண்ட் இருந்தா அப்டியே ஓடி போய்டு கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன் என ரஜினி பேசும் வசனம் இடம்பெற்றிருக்கிறது.

அதேபோல் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் ட்ரெய்லரில், பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம், ஊரு கொடுவிலார்பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்தை வாடா என அஜீத் பேசும் வசனம் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி, உங்க மேல எனக்கு கொல கோவம் வரணும் ஆனா உங்கள எனக்கு பிடிச்சிருக்கு சார் என்ற வசனமும் இடம்பெற்றிருக்கிறது.

தற்போது இந்த இரு திரைப்பட ட்ரெய்லர் வசனங்களையும் வைத்து, கொல காண்டுல இருக்கேன் ஓடி போய்டுனு ரஜினிகாந்த் சொன்னதுக்கு, ஒத்தைக்கு ஒத்த வாடா என தல அஜீத் கொல கோவத்துல தில்லா பதிலளித்திருக்கிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.