‘பேட்ட’ Vs ‘விஸ்வாசம்’: ஒரே நாளில் மோதும் ரஜினி-அஜித்?

 

‘பேட்ட’ Vs ‘விஸ்வாசம்’: ஒரே நாளில் மோதும் ரஜினி-அஜித்?

‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை: ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கியுள்ள தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. இத்துடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படமும் ரிலீசாகிறது. பொங்கலுக்கு வெளியாகும் இவ்விரு திரைப்படங்களும் வணிக ரீதியாக கடும் போட்டியை சந்திக்கின்றன.

petta

இந்நிலையில், இப்படங்களின் ரீலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ மற்றும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி வியாழக்கிழமை திரைக்கு வரவுள்ளதாக கூறியுள்ளார்.

viswasam

இரு படங்களின் தயாரிப்புக் குழு தரப்பில் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தமிழ் சினிமாவின் இரு பெரும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படம் ஒரே நாளில் பொங்கலுக்கு வெளியாவதால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா வட்டாரங்களிலும் இவ்விருப்படங்களும் கவனம் ஈர்த்துள்ளன.