‘பேட்ட’ வில்லனுக்கு கிடைத்த கௌரவம்!

 

‘பேட்ட’  வில்லனுக்கு கிடைத்த கௌரவம்!

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார்

பாலிவுட் நடிகர்  நவாசுதின் சித்திக்கிற்கு ‘கோல்டன் டிராகன் விருது’ வழங்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி  நடிகராக வலம்  வருபவர் நடிகர்  நவாசுதின் சித்திக். இவர் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். 

navasudeen

இந்நிலையில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றி வரும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு லண்டன் வேல்ஸ் கார்டிஃபில் நடைபெறும் கார்டிஃப் சர்வதேச திரைப்பட விழாவில்  கோல்டன் டிராகன் விருது வழங்கப்பட்டது. இதை அந்நாட்டின் கவுரவ கவுன்சிலர் ஜெனரல் மிக் அந்தோனி  வழங்கி சிறப்பித்தார். 

 

இந்த விழாவில்  பழம்பெரும் நடிகை ஜூடி டென்ச்சுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.