பேட்ட வசூல்: அமெரிக்காவில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்!

 

பேட்ட வசூல்: அமெரிக்காவில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 80களில் கண்ட ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

petta

தமிழகம் தாண்டி சர்வதேச அளவிலும் பேட்ட திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமிழ் படம் பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை நாளக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.   அங்கு ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

petta

ரஜினி நடிப்பில் ஏற்கனவே  வெளியான ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘காலா’, ‘கபாலி’, ‘2.0 என அனைத்துப் படங்களும் அங்கு வசூல் சாதனை செய்தது. அதனாலேயே தமிழ் படங்களுக்கு ஒரு பெரிய மார்க்கெட் அமெரிக்காவில் வந்துள்ளது.

தற்போது ‘பேட்ட’ படம் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 14கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. முன்னதாக படம் வெளிவந்த ஒரே நாளில் ப்ரீமியர் ஷோ சேர்த்து ரூ 5.28 கோடி வசூல் செய்துள்ளது என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.