‘பேட்ட’ ரஜினிக்காக  மீண்டும் இணைந்த சூப் பாய்ஸ்!

 

‘பேட்ட’ ரஜினிக்காக  மீண்டும் இணைந்த சூப் பாய்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்திற்காக ரசிகர்களின் ஃபேவரைட்டான ‘கொலவெறி சூப் பாய்ஸ்’ மீண்டும் இணைந்துள்ளனர்.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்திற்காக ரசிகர்களின் ஃபேவரைட்டான ‘கொலவெறி சூப் பாய்ஸ்’ மீண்டும் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் மற்றும் தனுஷ் கூட்டணியில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘கொலவெறி டி’ பாடல் உலகம் முழுவதும் மாஸ் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து அவர்களது காம்போவில் ரிலீசான அனைத்து ஆல்பமும் வெற்றி பெற்றது.

petta

சமீபகாலமாக இருவரும் கூட்டணி அமைக்காமல் இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தில் தனுஷ்-அனிருத் காம்போவில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது.

இதையொட்டி நேற்று வெளியான ‘பேட்ட டிராக் லிஸ்ட்’ பட்டியலில் தனுஷ் எழுதியிருக்கும் வரிகளுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ’இளமை திரும்புதே’ என்ற பாடலை ரஜினிக்காக தனுஷ் எழுதியுள்ளார். ‘பேட்ட’ ஆல்பத்தில் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.