பேட்ட படத்தை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் பிரபலம்!

 

பேட்ட படத்தை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்ட படம் பார்த்த பின்பு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் பேட்ட படம் பார்த்த பின்பு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

நடிகரும் ஹரிஷ் கல்யாண் 2001ம் ஆண்டு சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.அதைத்தொடந்து ‘சிந்து சமவெளி’, ‘பொறியாளன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்பு படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஹரிஷ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் கலந்துகொண்டு இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டார். 

harish kalyan

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு மற்ற பிரபலங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது போலவே, ஹரிஷ் கல்யாணுக்கும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. ஹரிஷுக்கு ஜோடியாக பிக்பாஸ் ரைசா நடிக்க ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அந்த வெற்றியை தொடர்ந்து ‘புரியாத புதிர்’ இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ‘காளி’ பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் நடிக்கவிருக்கிறார். 

இந்நிலையில், பேட்ட படம் பார்த்து பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் “பேட்ட ஒரு சிறப்பான தரமான சம்பவம், தலைவர் அதே ஸ்டைல் அதே கெத்து என்றும், தலைவரை பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும் புல்லரிப்பு சம்பவம் நிறைய உள்ளன கண்டிப்பாக தவறாத விடாதீர்கள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.