‘பேட்ட’ படத்துடன் ‘காஞ்சனா 3’: லாரன்ஸ் ஹாப்பி..!

 

‘பேட்ட’ படத்துடன் ‘காஞ்சனா 3’: லாரன்ஸ் ஹாப்பி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்துடன் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாகவுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்துடன் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீசாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘பேட்ட’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், அத்துடன் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள ‘காஞ்சனா 3’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுவதால், இதன் மோஷன் போஸ்டர் ‘பேட்ட’ திரைப்படத்துடன் ரிலீசாகவுள்ளது.

ராகவா லாரன்ஸுடன் வேதிகா, ஓவியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய தாமதமான நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ‘பேட்ட’ படத்துடன் ரிலீசாகவுள்ளதால் நடிகர் ராகவா லாரன்ஸ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

kanchana3

ராகவா லாரன்ஸின் ‘முனி’, ‘காஞ்சனா’ சீரிஸ் படங்கள் குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் கோடை விடுமுறையை டார்கெட் செய்து வரும் ஏப்.18ம் தேதி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.