பேட்ட படத்தின் வசூல் எவ்வளவு? இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதில்

 

பேட்ட படத்தின் வசூல் எவ்வளவு? இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதில்

பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

சென்னை: பேட்ட படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பெரும் பட்டாளமே நடித்திருக்கிறது. 

karthik subburaj

இப்படம் ரஜினி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நடைபெற்றது.

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அப்போது கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆன பின்பும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போல் உள்ளது. இன்று ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து கொண்டாடினேன். பேட்ட படத்தின் வசூல் குறித்து விநியோகிஸ்தர்கள் தான் கூற வேண்டும். அடுத்ததாக தனுஷ் உடன் ஒரு படம் செய்யப் போகிறேன்” என கூறினார்.