‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் எப்போ தெரியுமா?

 

‘பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் எப்போ தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, முனீஸ்காந்த், சோமசுந்தரம், சசிக்குமார், சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், முதன்முறையாக ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள ’பேட்ட’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் டிச.3ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மல்டி ஸ்டாரர் படமான ‘பேட்ட’ திரைப்படம் ஊட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் டேராடூன், டார்ஜிலிங், சென்னை, லடாக், ஐரோப்பா, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் என்ற பெருமை ‘பேட்ட’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது. இத்துடன், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும், சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது