‘பேட்ட’ படத்தின் ஆடியோ தேதி வெளியானது: கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

 

‘பேட்ட’ படத்தின் ஆடியோ தேதி வெளியானது: கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி-கார்த்திக் சுப்பாராஜ் ஆகியோர் முதல் முறையாக இணையவுள்ள பேட்ட படத்தின் ஷூட்டிங் முடிந்து, பொங்கல் ரிலீசுக்காக இறுதி கட்ட பணிகள் நடந்துவருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், அதுகுறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றும், முதல் சிங்கள் டிசம்பர் 3ம் தேதியும், இரண்டாவது சிங்கள் 7ம் தேதியும் வெளிவரவுள்ளதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்துள்ளார். இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.