பேட்ட: தலைவரு வேற லெவல், மரணமாஸ்: பொது மக்கள் கருத்து – வீடியோ !

 

பேட்ட: தலைவரு வேற லெவல், மரணமாஸ்: பொது மக்கள் கருத்து – வீடியோ !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பேட்ட படம் குறித்து பொது மக்களின் கருத்துக்களை காணலாம்!