‘பேட்ட’ கெட்டப்பில் சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார்!

 

‘பேட்ட’ கெட்டப்பில் சாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் கெட்டப்பில்  வாரணாசியில்  உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

வாரணாசி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தின் கெட்டப்பில்  வாரணாசியில்  உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின்  மீதான எதிர்பார்ப்பு கூடி கொண்டே செல்கிறது.இதில்  விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது.

‘பேட்ட’ படத்தின் ஷூட்டிங் டார்ஜிலிங், டேராடூன், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளது. தற்போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் த்ரிஷா மற்றும் ரஜினிகாந்த் நடிக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  வாரணாசியில்  உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில்  இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பேட்ட படத்தின் கெட்டப்பில் இருந்தார்.  அவரைப் பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது.