பேட்டிங்கை துவங்கியது இந்தியா | வெல்லப் போவது யார்?

 பேட்டிங்கை துவங்கியது இந்தியா | வெல்லப் போவது யார்?

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமான போட்டி துவங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.ஆஸ்திரேலிய அணியிலும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அணியே தற்போதும் களமிறங்கியுள்ளது. 

ind vs aus

உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் 11 முறை நேருக்கு நேர்  மோதியுள்ளன.இதில் மூன்று முறை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. மீதமுள்ள எட்டு முறை ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றிருக்கிறது. 

1999-ல் ஓவல் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 77 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.  சூப்பர் சிக்ஸ் பிரிவில் நடந்த போட்டியில், கங்குலி, சச்சின், ட்ராவிட், அசாருதீன் ஆகிய நட்சத்திர வீரர்கள் இருந்தும், இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 
இதே போல், 2003-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவித்திருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

ind vs aus

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டி இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒன்று என்றால், அதே அளவுக்கு 2011ஆம் ஆண்டு காலியிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான நினைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கான போட்டிகளில், பெரும்பாலும்  ஆஸ்திரேலியாவின் ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ சிறப்பாக செய்யப்பட்டதை தொடர்ந்தே அந்த அணி வெற்றிபெற்றிருக்கிறது. 
2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரிக்கி பாண்டிங் மற்றும் மார்ட்டின். 1999ஆம் ஆண்டில் மார்க் வாக் மற்றும் மெக்ராத் ஆகியோரைச் சொல்லலாம். 

ind vs aus

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமான பலத்துடன் திகழும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்..பதினைந்து ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி எழுபத்தைந்து ரன்கள் எடுத்துள்ளது. மிச்செல் ஸ்டார்க் பந்தில் ரோகித் ஷர்மாவை அவுட் செய்யும் ஒரு வாய்ப்பை தவற விட்டார்.