பேடிஎம் நிறுவனரை பிளாக்மெயில் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்கள்

 

பேடிஎம் நிறுவனரை பிளாக்மெயில் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்கள்

பேடிஎம் நிறுவனரை பிளாக்மெயில் செய்த பெண் மற்றும் அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

டெல்லி: பேடிஎம் நிறுவனரை பிளாக்மெயில் செய்த பெண் மற்றும் அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் முன்னணி நிறுவனமான பேடிஎம்-ன் நிறுவனர் விஜய்சேகர் சர்மா. பேடிஎம் நிறுவனம் தொடங்கப்பட்டதற்கு முன்பே விஜய் சேகர் சர்மாவிடம் பனி புரிந்து வந்த சோனியா தவான் எனும் பெண்,  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பேடிஎம் நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து விஜய் சேகர் சர்மாவிடம் உதவியாளராக பனி புரிந்து வருகிறார்.

எனவே, சோனியா மீதுள்ள நம்பிக்கை மிகுதியால் தனது லேப்-டாப், கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை கையாள சர்மா அனுமதித்திருந்தார். ஆனால், சர்மாவின் அந்தரங்க தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் ரகசியங்களை சோனியா திருடிக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து, ரியல் எஸ்டேட் வர்த்தகரான தனது கணவர் ரூபக் ஜெயின், நண்பர் ரோஹித் சோமல் மற்றும் அலுவலக நண்பரான தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து விஜய் சேகர் சர்மாவிடம் பணம் பறிக்க திட்டமிட்ட சோனியா, சர்மாவின் சகோதரர் அஜய் மற்றும் சேகர் சர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.10 கோடி தர வேண்டும் எனவும், இல்லையென்றால் பல ரகசியங்களை கசியவிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, செல்போன் உரையாடல்களை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், சோனியா, அவரது கணவர் ரூபக் ஜெயின் மற்றும் அலுவலக நண்பரான தேவேந்திர குமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்கள் மீது நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான ரோஹித்தை போலீசார் தேடி வருகின்றனர்.