பேச்சு தான் ஸ்ட்ராங்… எடப்பாடியின் ஃபேஸ்மெண்ட் வீக்… பாமகவுக்கு பம்மும் அதிமுக..!

 

பேச்சு தான் ஸ்ட்ராங்… எடப்பாடியின் ஃபேஸ்மெண்ட் வீக்… பாமகவுக்கு பம்மும் அதிமுக..!

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்து எதிர்கட்சியினரை மட்டும் தோற்கடிக்கவில்லை. சொந்த கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தமாகா தரப்பையும் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டார்களாம்.

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்து எதிர்கட்சியினரை மட்டும் தோற்கடிக்கவில்லை. சொந்த கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தமாகா தரப்பையும் திட்டமிட்டு தோற்கடித்துவிட்டார்களாம். அதனால் தான் மறைமுக தேர்தல் நடந்து அதிமுக தரப்பு கணிசமான வெற்றி பெற்றபோதும் கூட்டணி கட்சிகள் மருந்துக்கு கூட அதிமுக தலைமைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

modi

அவர்கள் தற்போது வரை அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். பாமகவுக்கு ஒதுக்கிய இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது. தமாகா உள்ளாட்சி தேர்தலில் பார்ட் பார்ட்டாக கழற்றிவிடப்பட்டது. தேமுதிக நிலை அதைவிட மிகவும் மோசம். அதனால் தான் கூட்டணி தலைவர்கள் யாரும் அதிமுக அலுவலகத்திற்கு வரவில்லை. வாழ்த்தும் சொல்லவில்லை.

உள்ளாட்சி தேர்தல் விவகாரங்களை பொதுக்குழு, செயற்குழுவில் பேசிய படி கட்சியின் மேலிடமே பேசி தீர்க்கும். மாவட்ட அளவில் அதிமுகவினர் டீலிங் பேசி குழப்பதை ஏற்படுத்த வேண்டாம். தேர்தலில் நிற்பதையும், ஜெயிப்பதையும் மட்டுமே பாருங்கள். கூட்டணி இடையே குழப்பதை ஏற்படுத்த வேண்டாம் என்ற ரீதியில் அறிக்கை விட்டு கூட்டணி தலைவர்களை சமாதானப்படுத்த முயற்சித்து இருக்கிறார்கள்.

pmk

ஆனால் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து கார்ப்பரேஷன் மேயர், நகராட்சி தலைவர்கள் பதவியை கூடுதலாக தருகிறோம் என்று தங்கள் தூதர் மூலம் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்கள். அதை அப்போது பார்க்கலாம். இப்போதைக்கு நாங்கள் இழந்த பதவிக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாமல் கட்சியின் தூதுவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.