பேங்க் மேனேஜர் மாதிரி பேசி 3 கோடி வரை சுருட்டி கும்பல்: டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார்!

 

பேங்க் மேனேஜர் மாதிரி பேசி 3 கோடி வரை சுருட்டி கும்பல்: டெல்லியில் கைது செய்த தமிழக போலீசார்!

இவர்களில் முக்கிய குற்றவாளிகளான  சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முதியவர்கள் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கியின் மேலாளர் போல பேசுவது போல் பேசி வங்கிக் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்ட் ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாக கூறி வங்கி  கணக்கு விவரத்தை  பெற்றுக்கொள்ளும் கும்பல் ஏ.டி.எம். கார்டின் 16 இலக்க எண், நிறைவுத் தேதி, சிவிவி வாங்கி அவற்றை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்யும் கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி இதுவரை 3 கோடி ரூபாய்  வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

TTN

இதுகுறித்து வந்த புகாரின் பேரில் அவர்களின் செல்போன் எண்களை தொழில் நுட்ப உதவியுடன் கண்காணித்து வந்து தனிப்படை போலீசார் டெல்லியில் 4 நாட்கள் முகாமிட்டு  தீபக் குமார், தேவ்குமார், வில்சன் என்ற 3 பேரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.இவர்களில் முக்கிய குற்றவாளிகளான  சிவசக்தி, ஜெயராஜ், ஜிப்ரேல், நிகேல் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

TTN

 இவர்கள் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.  தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.