“பேங்க் மேனேஜர் பேசுறேன்…” வெளிநாட்டில் வம்பிழுத்து வசமாக சிக்கிய போலி கால்சென்டர் கொள்ளையர்கள்!

“பேங்க் மேனேஜர் பேசுறேன்…” வெளிநாட்டில் வம்பிழுத்து வசமாக சிக்கிய போலி கால்சென்டர் கொள்ளையர்கள்!

டெல்லியில் போலி கிரெடிட் கார்ட்டு கால் சென்டர் நடத்தி மக்களை ஏமாற்றிவந்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம்முடைய செல்போன் நம்பருக்கு கால் செய்தும் நபர், “எஸ்.பி.ஐ பேங்க் மேனேஜர் பேசுறேன். உங்கள் அக்கவுண்ட் அப்டேட் செய்யனும். உங்க ஏடிஎம் பின் நம்பர், கார்டின் பின்னாடி இருக்கும் சிவிவி நம்பரை சொல்லுங்க” என்று கேட்பார். 

fake call

விவரம் அறிந்தவர்கள் அந்த அழைப்பை துண்டித்துவிடுவார்கள். அப்பாவிகள், இந்த நம்பரை எல்லாம் கொடுத்துவிட்டு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழந்துவிட்டு அவதியுறுவார்கள். இது மட்டுமல்ல, கிரெடிட் கார்டின் லிமிட்டை பல மடங்கு அதிகரித்து புதிய கார்டு தரப்போவதாக தூண்டில் போட்டு கிரெடிட் கார்டில் உள்ள பணம் முழுவதையும் சுருட்டிக்கொள்வது இந்த குழுவினரின் வேலை.
பல ஆண்டுகளாக இந்த மோசடி நடந்து வருகிறது. ஆனால், இப்போதுதான் டெல்லியைச் சேர்ந்த ஒரு குழுவை போலீசார் பிடித்துள்ளனர். அதுவும் வெளிநாட்டு அழுத்தம் காரணமாகவே இந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
கனடாவைச் சார்ந்த ஒருவருக்கு தனக்கு கனடா அரசு அளித்துள்ள சமூக காப்பீட்டுத் திட்ட எண்ணைப் பயன்படுத்தி இந்தியாவைச் சார்ந்த ஒருவர் 13,500 டாலர் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்தார். இதைத் தொடர்ந்து கனடா காவல்துறையிலிருந்து நவம்பர் 15ம் தேதி இந்திய காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்வதேச எண்ணுக்கு சென்ற அழைப்புகளை ஆய்வு செய்து டெல்லியில் முறைகேடாக செயல்பட்டு வந்த கால் சென்டர் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு தனியார் அலுவலகம் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சொகுசாக அமைக்கப்பட்டிருந்த அந்த கால் சென்டரைப் பார்த்து போலீசாரே அசந்துவிட்டனர். இந்த கும்பலை பிடித்து விசாரித்தபோது வங்கியிலிருந்து பேசுவதாக கூறி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மோசடி செய்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து கால் சென்டரில் மோசடியில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் யார் யாரிடமிருந்து பணத்தை திருடினார்கள், அதை என்ன செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrest

இந்தியாவில் இந்த மோசடி புதிது இல்லை. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. எத்தனையோ புகார் அளித்தும் எல்லாமே கிணற்றில் போட்ட கல் போலவே உள்ளது. ஆனால், கனடா போலீசார் புகார் அளித்த 48 மணி நேரத்தில் முழு கும்பலையும் போலீசார் பிடித்துவிட்டனர். இதே வேகத்தை இந்திய மக்கள் புகார் அளிக்கும்போது செய்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் எப்போதோ நிறுத்தப்பட்டிருக்கும்.