பெல்லட் குண்டு தாக்குதலால் கண் பார்வையை இழந்த குழந்தை, போராடும் பெற்றோர்கள்

 

பெல்லட் குண்டு தாக்குதலால் கண் பார்வையை இழந்த குழந்தை, போராடும் பெற்றோர்கள்

பெல்லட் குண்டு தாக்குதலால் கண் பார்வையை இழந்த ஒரு வயது குழந்தைக்கு பார்வை கிடைக்க பெற்றோர்கள் போராடி வருகின்றனர்

காஷ்மீர்: பெல்லட் குண்டு தாக்குதலால் கண் பார்வையை இழந்த ஒரு வயது குழந்தைக்கு பார்வை கிடைக்க பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இந்திய ஆயுதப்படை நடத்திய தாக்குதலின் போது ஹிபா நிசார் எனும் ஒரு வயது பெண் குழந்தையின் வலது கண்ணில் பெல்லட் குண்டு தாக்கியது. இதனால் பார்வையை இழந்த ஹிபாவின் பார்வையை மீட்க அவளது பெற்றோர்கள் போராடி வருகின்றனர்.

காஷ்மீர் ரீடர் பத்திரிகைக்கு ஹிபா குடும்பம் அளித்த பேட்டியில், ஏப்ரல் 10-ஆம் தேதி ஹிபாவுக்கு மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இந்தமுறை அவளுக்கு பார்வை திரும்பும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர் என தெரிவித்திருக்கின்றனர்.

hiban

ஹிபாவின் தந்தை நிசார் அகமது, இறைவனை வணங்கி அவளுக்கான சிறந்த சிகிச்சையை அளிப்பதுதான் என்னால் செய்ய முடிந்தது. அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீது நம்பிக்கை உள்ளது. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை அவளை பரிசோதனைக்கு அழைத்து வருகிறோம். எனினும் கண் பார்வையில் முன்னேற்றம் இல்லை. இந்தமுறை மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுவரை 50,000 ரூபாய்க்கு மேல் அவள் சிகிச்சைக்காக செலவு செய்திருக்கிறேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அவளுக்கு பார்வை திரும்ப வேண்டும் என பேட்டியளித்துள்ளார்.

ஹிபா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவளின் தாத்தா அப்துல் அகத் பட், எங்கள் பகுதியில் காவல் வளையம் அதிகம் என்பது தெரியும். அன்று வீட்டின் அருகே ஆயுதப்படையினர் இருப்பதை அறியாமல் என் மருமகள் பேத்தியுடன் வெளியே சென்றார். அப்போது ஆயுதப்படை தாக்குதல் நடத்தினார்கள், பெல்லட் குண்டுகளை என் மருமகள் தாங்கிக்கொண்டு குழந்தையின் முகத்தை மூடினார். அப்படி இருந்தும் குழந்தையின் வலது கண்ணில் பெல்லட் குண்டு தாக்கியது. இந்த சம்பவத்தில் என் மருமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.