பெற்றோர்கள் இன்றி காதல் திருமணம் கிடையாது: 10,000 இளைஞர்கள் உறுதிமொழி

 

பெற்றோர்கள் இன்றி காதல் திருமணம் கிடையாது: 10,000 இளைஞர்கள் உறுதிமொழி

பெற்றோர்கள் இன்றி காதல் திருமணம் செய்யமாட்டோம் என 10,000 இளைஞர்கள் காதலர் தினத்தன்று உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

சூரத்: பெற்றோர்கள் இன்றி காதல் திருமணம் செய்யமாட்டோம் என 10,000 இளைஞர்கள் காதலர் தினத்தன்று உறுதிமொழி ஏற்க உள்ளனர்.

காதலர் தினத்தன்று, பெற்றோர்கள் இல்லாமல் காதல் திருமணம் செய்யமாட்டோம் என 10,000 இளைஞர்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனர். இதனால் அவர்களின் காதல் உறவில் விரிசல் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 

ஹாஸ்யமேவ் ஜெயதே எனும் தன்னார்வ அமைப்பை நடத்திவரும் கமலேஷ் மசாலாவாலா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. கமலேஷ் மசாலாவாலா சிரிப்பு சிகிச்சை நிபுணராக (laughter therapist) பணிபுரிந்து வருகிறார். இந்த நிகழ்வு குறித்து அவர், இன்றைய இளைஞர்கள் காதல்வயப்பட்டு அவரசமாக திருமணம் செய்து கொள்கின்றனர். பெற்றோரை மதிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யும் அவர்களின் உறவு குறைந்த காலம் கூட நீடிப்பதில்லை. திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு. எனவே நாங்கள் பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி உணர்த்த இந்நிகழ்வை நடத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு கிட்டதட்ட 15-க்கும் அதிகமான பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.