பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு இனிமே இந்த தண்டனை தான்!

 

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு இனிமே இந்த தண்டனை தான்!

பெற்றோரை கைவிடும் மகளோ, மகனோ யாராக இருந்தாலும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை பெறுவதற்கான சட்ட முன்வரைவுக்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பீகார்: பெற்றோரை கைவிடும் மகளோ, மகனோ யாராக இருந்தாலும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை பெறுவதற்கான சட்ட முன்வரைவுக்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

bihar

பிள்ளைகளால் கைவிடப்படும்  பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் ஆங்காங்கே முதியோர் இல்லங்கள் திறந்த வண்ணம் உள்ளன. சுயநலத்தால் பெற்றோரின் தியாகங்களை கருத்தில் கொள்ளாமல் அவர்களை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

nithish

இந்நிலையில் இதற்கான  சட்ட முன்வரைவிற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்றும் குறிப்பாக ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை பெறுவதற்கான  வழிவகை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.