பெரும்பான்மையை நிரூபிக்க நெருக்கடி தந்த உச்சநீதிமன்றம் ! முதல்வர், துணை முதல்வர் கூண்டோடு ராஜினாமா !

பெரும்பான்மையை நிரூபிக்க நெருக்கடி தந்த உச்சநீதிமன்றம் ! முதல்வர், துணை முதல்வர் கூண்டோடு ராஜினாமா !

4 நாட்கள் மகராஷ்டிரா முதலமைச்சர் பதவி வகித்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

முன்னதாக துணை முதலமைச்சராக பதவி வகித்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜீத் பவார் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் 4 நாட்கள் நீடித்த மகா அரசியல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.

maharastra

மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த சரத்பவாரின் மருமகன் அஜீத் பவார் ஆதரவளிக்க பாஜவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக கடந்த சனிக்கிமை பொறுப்பேற்றுக்கொண்டார். அஜீத் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். 
பட்னாவிஸ் ஆட்சி அமைத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடி ஒளிபரப்ப வேண்டும் என்றும் மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவை துணை முதல்வர் அஜித் பவார். தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் தனது பதவி ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார் பட்னாவிஸ். இதன் மூலம் 4 நாட்களாக நடைபெற்று வந்த மகா அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது.