பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் ஜான்சன்!

 

பெரும்பான்மையை இழந்தார்  பிரிட்டன் பிரதமர் ஜான்சன்!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார். 

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி எம்பியான ஃபிலிப் லீ, தொழிலாளர் கட்சிக்கு மாறியுள்ளார். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

Jonson

மேலும் கட்சி தாவிய ஃபிலிப் லீ, கன்சர்வேடிவ் கட்சி முன்பு போல் இல்லை. அதில் பொய்கள் நிறைந்துவிட்டது என்று குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளார். இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் மாதம் 14ம் தேதி வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

philip

இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான கெடுவை நீடிக்கக் கோரும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டபடி அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் பிரிட்டனின் வெளியேற்றம் நிகழ்ந்தே தீரும் என்று கூறியுள்ளார்.  இதனால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.