பெருசு ஒண்ணு சின்னது ஒண்ணுன்னு, ரெண்டு வச்சுக்கலாம், கோர்ட் அனுமதி!`

 

பெருசு ஒண்ணு சின்னது ஒண்ணுன்னு, ரெண்டு வச்சுக்கலாம், கோர்ட் அனுமதி!`

பெரிய துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக கைத்துப்பாக்கி உரிமம் பெற உரிமையில்லை எனக் கூற முடியாது, இரு ஆயுத உரிமங்கள் வைத்துக் கொள்வதற்கு ஆயுத சட்டத்தில் எந்த தடையும் இல்லை, எனவே மனுதாரருக்கு கைத்துப்பாக்கி வழங்குவது குறித்து பரிசீலிக்கவும்

தலைப்பைப் பார்த்த உடனே தாண்டிகுதிச்சு உள்ளே வந்த பேட் பாய்ஸ் எல்லாம் கைதூக்குங்க பாப்போம்? ம்ம்ம். இருக்கட்டும். பெரிய சைஸ் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வாங்கிவிட்டு, சின்னதாக கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு நாகர்கோவிலைச் சேர்ந்த எஸ்.ஆர். குமார் என்பவர் கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு போட்டிருந்தார். ”ஏன்யா, உனக்குத்தான் அம்மாம்பெருசா ஒண்ணு இருக்கே, திரும்பவும் குட்டியா எதுக்கு இன்னொண்ணு, அதெல்லாம் அனுமதிக்க முடியாது”ன்னு, ஆட்சியரும், வருவாய் நிர்வாக ஆணையரும் சேர்ந்து விரட்டிவிட, மனிதர் கோவித்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போய்விட்டார்.

Varieties of Gun

வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ”பெரிய துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக கைத்துப்பாக்கி உரிமம் பெற உரிமையில்லை எனக் கூற முடியாது, இரு ஆயுத உரிமங்கள் வைத்துக் கொள்வதற்கு ஆயுத சட்டத்தில் எந்த தடையும் இல்லை, எனவே மனுதாரருக்கு கைத்துப்பாக்கி வழங்குவது குறித்து பரிசீலிக்கவும்” என தீர்ப்பெழுதிவிட்டார் நீதிபதி. ரெண்டு துப்பாக்கி வாங்கி என்ன பண்ணுவாரு? பாகிஸ்தான் பார்டருக்கு போகப்போறாரோ?