பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

 

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

உடலுக்குள் இருக்கும் எல்லா காயங்களையும் ஆற்றும் வலிமை பெருங்காயத்திற்கு உண்டு. சிலர் இதன் வாசனைப் பிடிக்காமல் சமையலில் பயன்படுத்த மாட்டார்கள். இது சமையலில் வெறும் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுகிற பொருள் கிடையாது. முக்கியத்துவம் உணர்ந்து தவறாமல், சமையலில் பயன்படுத்துங்கள்.  பெருங்காயத்துடன் நீர் சேர்த்து அரைத்து குழந்தைகளின் நெஞ்சில் தடவினால் கக்குவான் இருமல் குணமாகும்.

பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்

உடலுக்குள் இருக்கும் எல்லா காயங்களையும் ஆற்றும் வலிமை பெருங்காயத்திற்கு உண்டு. சிலர் இதன் வாசனைப் பிடிக்காமல் சமையலில் பயன்படுத்த மாட்டார்கள். இது சமையலில் வெறும் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுகிற பொருள் கிடையாது. முக்கியத்துவம் உணர்ந்து தவறாமல், சமையலில் பயன்படுத்துங்கள்.

பெருங்காயத்துடன் நீர் சேர்த்து அரைத்து குழந்தைகளின் நெஞ்சில் தடவினால் கக்குவான் இருமல் குணமாகும். பெருங்காயம் கிராம்பு இரண்டையும் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும். பெருங்காயத்தை பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால் பிரசவத்திற்கு பிறகு கர்ப்ப பையில் தங்கியிருக்கும் அழுக்கு வெளியேறும்.
பெருங்காயம் ஒருபங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்றுவலி உடனே குணமாகும்.  பெருங்காயம் , மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில் போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.

பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும். பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளியை காதில் விட்டால் காது வலி குணமாகும். பெருங்காயம், உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி நெருப்பில் போட வேண்டும். அந்தப் புகையை முகர்ந்தால் இரைப்பை நோய், வயிற்று உப்புசம் ஆகியவை தீரும்.