“பெருகும் போலி வெப்சைட்டுகள் -கருகும் இள மொட்டுக்கள் “-மருத்துவ படிப்பில் உருவான போலி தளங்கள்..

“பெருகும் போலி வெப்சைட்டுகள் -கருகும் இள மொட்டுக்கள் “-மருத்துவ படிப்பில் உருவான போலி தளங்கள்..

கர்நாடகாவில் மெடிக்கல், இன்ஜினியரிங், பட்ட படிப்புக்கு COMEDK என்ற பெயரில் ஒரு வலைத்தளம் இயங்குகிறது,அந்த வெப்சைட் மூலமாகத்தான் கர்நாடகாவுக்கு வெளியே இருக்கும் மாணவர்களுக்கு  அட்மிஷன் நடைபெறுகிறது .ஆனால் அந்த பெயரிலேயே பல போலியான வெப்சைட்டுகளை  சில நிறுவனங்கள் நடத்தி ,மாணவர்களை ஏமாற்றி வருவதாக அதிகாரிகள் கூறினார்கள். 

இதுபற்றி comedk நிறுவன அதிகாரி குமார் கூறுகையில் ,”கர்நாடகாவுக்கு வெளியிலிருந்து வரும் மாணவர்கள் comedk என்ற வெப்சைட் மூலமாகத்தான் professional படிப்பான இன்ஜினியரிங் ,மெடிக்கல் போன்ற பட்டபடிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது ,ஆனால்  இதே பெயரிலும் ,இதே லோகோவையும் பயன்படுத்தி சிலர் மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள் .அவர்கள் மாணவர்களின் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டு பணமோசடியில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார் .அவர்களிடம் மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கூறினார் .மேலும் www.comedk.org  என்பது மட்டும்தான் ஒரிஜினல் வெப்சைட் ,மற்றவையெல்லாம் போலிகள் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டுமென குமார்  கூறினார் .