பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்யா! சொன்ன சொல்லை காப்பாற்றிய ஆனந்த் மகிந்திரா!

 

பெரிய மனுஷன் பெரிய மனுஷன்தான்யா! சொன்ன சொல்லை காப்பாற்றிய ஆனந்த் மகிந்திரா!

மகிந்திரா குழுமம் இனி தனது அனைத்து நிர்வாக குழு கூட்டங்களிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி ஜார், கிளாஸ் பயன்படுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும், மகிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபர். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பார். குறிப்பாக டிவிட்டரில் தனது கருத்துக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்வார். டிவிட்டரில் ஆனந்த் மகிந்திராவை 70 லட்சம் பேருக்கு மேல் பின்தொடருகின்றனர்.

மகிந்திரா நிறுவன கூட்டம்

அண்மையில், டிவிட்டரில் ஆனந்த் மகிந்திரா தனது நிறுவன கூட்டத்தின் படத்தை வெளியிட்டு அது குறித்து தகவலை பதிவு செய்து இருந்தார். மகிந்திராவின் பதிவை பார்த்த அவரை டிவிட்டரில் பின்தொடரும் ஒரு பெண்மணி நிறுவன கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதில் சில்வர் பாட்டில்கள் இருக்கலாம். உங்களது கவனத்துக்காக குறிப்பிடுகிறேன் என்று பதிவு செய்தார். அதற்கு ஆனந்த் மகிந்திரா, ஆமாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்படும். அன்று அவற்றை (பிளாஸ்டிக் பாட்டில்கள்) பார்ப்பதற்கே மிகவும் சங்கடமாக இருந்தது என்று பதில் அளித்து இருந்தார்.

கண்ணாடி பாட்டில், ஜார்

இந்நிலையில், மகிந்திரா நிறுவனத்தின் அனைத்து நிர்வாக குழு கூட்டங்களிலும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கண்ணாடி ஜார், பாட்டில்கள் மற்றும் கிளாசுகள் பயன்படுத்தப்படும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஆக, ஆனந்த் மகிந்திரா சொன்ன மாதிரி தனது நிறுவனத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை நிறுத்தி வி்ட்டார்.