‘பெரிய நடிகர்கள் பயந்து நடுங்கும் போது சூர்யா தைரியமாக பேசியுள்ளார்’ : ரஜினி, விஜய்-யை மறைமுகமாக சாடும் சீமான்!

 

‘பெரிய நடிகர்கள் பயந்து நடுங்கும் போது  சூர்யா தைரியமாக பேசியுள்ளார்’ : ரஜினி, விஜய்-யை மறைமுகமாக சாடும் சீமான்!

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது

புதிய கல்வி கொள்கை குறித்து பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாகப் பேசியுள்ளார் என்று சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். 

suirya

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணிக்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்’ என்றார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

seeman

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இதை அரசியலாகப் பார்க்கக் கூடாது. அது நம் உரிமை. சூர்யா பேசுவதை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். மற்ற பெரிய நடிகர்கள் இதுகுறித்து பேச பயந்து கொண்டிருக்கும் போது  அவர் தைரியமாகப் பேசியுள்ளார். கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அவர் கேட்கும் கேள்விகளில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார். 

hindi

தொடர்ந்து பேசிய அவர்,  சமச்சீர் பாடத்திட்டம் என்பது சமச்சீர் கல்வி முறை இல்லை. நானும் அரசு பள்ளியில் படித்து வந்தவன் தான். நகர்ப்புறங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் ஆசிரியர் இருப்பது போலக் கிராமப்புறங்களில் இல்லை. அப்போது எப்படி கிராமப்புறத்தில் படிக்கும் மாணவரும் நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவரும் ஒரே தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியும். இதைத் தான் சூர்யா சொல்கிறார். புதிய கல்வி கொள்கை ஏற்கமுடியாது. அது நம் பிள்ளைகளை  நெருக்கடிக்குத் தள்ளிவிடும்’ என்றார்.