பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்! – முதலமைச்சர் பழனிசாமி

பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்! – முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் புதிதாக 29 தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புதிதாக 29 தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. திமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26,000 கோடி தான்; ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்ப்பு உள்ளது. மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியதுதான், அதிமுக செய்துவரும் வளர்ச்சித் திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

EPS

ஒவ்வொரு மாநில முதல்வர்களும் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநிலத்தை முன்னேற்றி வருகிறார்கள். கடந்த 40 ஆண்டுகளாக தமிழக முதல்வர்கள் யாரும் வெளிநாடு செல்லவில்லை. அரசு எப்படி செயல்படுகிறது என்பது ஸ்டாலினுக்கு தெரியாது அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை. உலக நாடுகளுக்கு சென்று பார்வையிட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும். மத்திய அரசு நலத்திட்டங்களை அளித்தால் அதனை அதிமுக வரவேற்கும்” எனக்கூறினார்.