பெரியார் நினைவு தினம்… கருஞ்சட்டை பேரணியால் அதிரும் திருச்சி

 

பெரியார் நினைவு தினம்… கருஞ்சட்டை பேரணியால் அதிரும் திருச்சி

பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது.

திருச்சி: பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் இன்று கருஞ்சட்டை பேரணி நடைபெறுகிறது.

சாதி ஏற்ற தாழ்வை போக்கி, சமூக நீதியை நிலை நிறுத்தி, மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்மானத்தோடு ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என இறுதிவரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால் அவருக்கு எதிராகவும், அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் சிலர் தற்போது தமிழகத்தில் பேசி வருகின்றனர். 

இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு திருச்சியில் இன்று நடைபெறவுள்ளது. மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்ட அமைப்புகள் இந்த பேரணியை ஒருங்கிணைத்துள்ளன. இதில் பெரியாரிய உணர்வுள்ள இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், பேரணியில் பெரியாரியம் குறித்த முழக்கங்களும் எழுப்பப்பட இருக்கின்றன. 

praba

முன்னதாக இந்த பேரணிக்கும், மாநாட்டுக்கும் தடை விதிக்கக்கோரிய வழக்கில், காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு பேரணி, மாநாடு நடத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.