பெரியார் சிலையில் உள்ள வாசகங்களை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி!

 

பெரியார் சிலையில் உள்ள வாசகங்களை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி!

கடவுள் உண்டு என்று கருத்து கூற  உரிமை இருக்கும் போது, கடவுள் இல்லை என்று கூறவும் உரிமை இருக்கிறது

சென்னை: பெரியார் சிலைகளுக்குக் கீழ் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

periyar

சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.தெய்வநாயகம் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், பெரியார் பகுத்தறிவு கொள்கையைத்தான் பரப்பினாரே தவிர, நாத்திகத்தைப் போதிக்கவில்லை. இதனால் அவரின் சிலைகளுக்குக் கீழே உள்ள வாசகங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்குப் பதில் மனு தாக்கல் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி,  பெரியார் சிலைகளின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் தீங்கு விளைவிக்கும் வாசகம் இல்லை என்று சுட்டிக்காட்டினார். 

hc

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி, மாறுபட்ட தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு.  கடவுள் உண்டு என்று கருத்து கூற  உரிமை இருக்கும் போது, கடவுள் இல்லை என்று கூறவும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.