பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உயர் நீதிமன்றம் கேள்வி!

 

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக, அதிமுக, திராவிட கழகம் மற்றும் பெரியார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து  விளக்கமளித்த ரஜினிகாந்த், ‘1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும்  நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டது என பலரும் உறுதி செய்துள்ளனர்.  

ttn

இதுகுறித்து அவுட்லுக் பத்திரிகையில் கூட செய்தி வெளியானது. பத்திரிகைகளில் வந்ததை தான் நான்  கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’ என்றார்.   ரஜினியின் இந்த கருத்துக்கு திமுக, அதிமுக, திராவிட கழகம் மற்றும் பெரியார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதேசமயம் ரஜினிக்கு ஆதரவாக  பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் களமிறங்கின. 

ttn

இந்நிலையில், பெரியார்குறித்து பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியிருக்கிறார் என்று கூறி  திராவிட விடுதலை கழக சென்னை மாவட்ட தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கடந்த 18 ஆம் தேதி புகார் அளித்தார். இருப்பினும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை எழும்பூர் 2வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

உமாபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை  நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ரஜினிகாந்த்  மீது அளித்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியதோடு,  சென்னை காவல் ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.