பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

 

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. ரஜினிக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார்.

சமீபத்தில் துக்ளக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், கடந்த 1971 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் ராமன், சீதை சிலை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அதற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ttn

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய ரஜினிகாந்த், நான் கற்பனையாக எதுவும் கூறவில்லை. அவுட்லுக் பத்திரிகையில் வெளியானதை தான் சொன்னேன். இதற்காக நான் வருத்தம் தெரிவிக்கவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என்றும் இது மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஜினி இவ்வாறு பேசியதற்காகத் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 

ttn

அந்த வழக்குகளை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, காவல்துறையில் புகார் கொடுத்து 15 நாட்கள் முடிவதற்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினார். அதனைத்தொடர்ந்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கிய பின்னரே நீதிமன்றத்தை அணுகியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். மேலும், இந்த மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிட்டதே தவறு என்று தெரிவித்த நீதிபதி ரஜினிக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.