பெரியார் என்ற மாமலையிடம் மோதி பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் குப்புற கவிழ்ந்திருக்கிறார்கள்- திருமாவளவன்! 

 

பெரியார் என்ற மாமலையிடம் மோதி பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் குப்புற கவிழ்ந்திருக்கிறார்கள்- திருமாவளவன்! 

பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது என்பது இன்று நேற்று அல்ல 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெரியார் என்ற மாமலையிடம் மோதி பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் குப்புற விழுந்திருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் மற்றும் சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டது என்றும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசியிருந்தார். மேலும் இதற்கு பெரியார் தான் தலைமை தாங்கினார் என்றும் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

பெரியாரை விமர்சிப்பது, கொச்சைப்படுத்துவது என்பது இன்று நேற்று அல்ல 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெரியார் என்ற மாமலையிடம் மோதி பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் குப்புற விழுந்திருக்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் மற்றும் சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டது என்றும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசியிருந்தார். மேலும் இதற்கு பெரியார் தான் தலைமை தாங்கினார் என்றும் துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியிருந்தார். 

rajini kanth

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பெரியார் பகைவர்களை எதிர்த்தார், கடுமையாக போராடினார், மூட நம்பிக்கை எதிர்த்தார் என்பது யாரும் மறுப்பதற்கில்லை. பெரியாரை யாராலும் வீழ்த்த முடியவில்லை. தேர்தல் அரசியலில் அண்ணாவும் கலைஞரும் பெரியாரின் கொள்கைகளை வலுசேர்த்தார்கள்.

சங் பரிவார் கருத்துகளுக்கு ரஜினிகாந்த் அடிப்பணிந்து செயல்படுகிறார். ரஜினி பகடை காயாக மாறி விடுவாரோ அல்லது அதுதான் அவரது அடையாளமாக இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது. அதுவே அவரது அரசியல் நிலைப்படாக இருந்தால் அந்த கனவு பலிக்காது.

பெரியார் வாழ்க என ரஜினிகாந்த் விரைவில் தெரிவிப்பார். பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியலில் ஈடுபட முடியாது என்பதை ரஜினி விரைவில் உணர்ந்து செயல்ப்படுவார். பொது தேர்வுகளை பொறுத்தவரை 5ஆம் வகுப்பிற்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும். தமிழில் வழிப்பாடு நடத்தவும் வேண்டும்.  பிப்ரவரி 22ஆம் தேதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விசிக திருச்சியில் தேசம் காப்போம் என்ற பேரணியை நடத்ததிட்டமிட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் இதழை வைத்து மட்டும் சவால் விடாமல், பெரியார் தொடர்பான அவரின் போராட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தேசிய அளவில் அம்பேத்கரையும், தமிழகத்தில் பெரியாரையும் தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாது” எனக் கூறினார்.