பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோல்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஃபோல்டு என்ற மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஆகிய மூன்று வகையான ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பொதுவாக இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. அதாவது டிஸ்பிளேவில் பன்ச் ஹோல் எனப்படும் செல்பி கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மூன்று கேலக்ஸி எஸ்10 மாடல்களும் மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.1 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜிபி ரேம், 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 128 ஜி.பி. மற்றும் 512 ஜிபி வேரியண்ட்கள், அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 6.4 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம், 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா, 128 ஜி.பி, 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. வேரியண்ட்கள், அல்ட்ரா-சோனிக் இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ சிறப்பம்சங்களை பொறுத்தவரை 5.8 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 12 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 16 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ் கேமரா, 10 எம்.பி. செல்ஃபி கேமரா, 128 ஜி.பி., மற்றும் 512 ஜி.பி வேரியண்ட்கள், ஹோம் பட்டன் விரல்ரேகை சென்சார், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் நிறங்கள் பட்டியல்:

சாம்சங் கேலக்ஸி எஸ்10899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.63,900) முதல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் மற்றும் ப்ரிஸ்ம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.71,000) முதல் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன், ப்ரிஸ்ம் வைட், செராமிக் பிளாக் மற்றும் செராமிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போன் விலை 749.99 டால்ர்கள் (இந்திய மதிப்பில் ரூ.53,300) முதல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரிஸ்ம் பிளாக், ப்ரிஸ்ம் புளு, ப்ரிஸ்ம் கிரீன் ப்ரிஸ்ம் வைட் மற்றும் சேனரி எல்லோ நிறங்களில் கிடைக்கிறது.