பெய்ட்டி புயல்; சென்னையில் கொந்தளிக்கும் கடல்

 

பெய்ட்டி புயல்; சென்னையில் கொந்தளிக்கும் கடல்

பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னை மற்றும் திருவள்ளூரில் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது.

சென்னை: பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னை மற்றும் திருவள்ளூரில் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பெய்ட்டி புயல் எதிரொலியால் சென்னையில் இருக்கும் மெரினா, பட்டினப்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்தோடு காணப்படுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டிலும் கடல் சீற்றத்தோடு காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.