பெய்ட்டி புயல் ஆந்திராவில் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும்

 

பெய்ட்டி புயல் ஆந்திராவில் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும்

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் இன்று பிற்பகலில் ஆந்திராவில் கரையைக் கடக்கவுள்ளது

சென்னை: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல் இன்று பிற்பகலில் ஆந்திராவில் கரையைக் கடக்கவுள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள பெய்ட்டி புயல், சென்னைக்கு கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடப்பதையொட்டி, ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெய்ட்டி புயலால் முதலில் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.