பெயிண்ட் விற்பனையில் கல்லா கட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ்…. லாபம் மட்டும் ரூ.764 கோடி…..

 

பெயிண்ட் விற்பனையில் கல்லா கட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ்…. லாபம் மட்டும் ரூ.764 கோடி…..

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.764 கோடி லாபம் ஈட்டியுள்ளது.

பெயிண்ட் உள்ளிட்ட அலங்கார வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ். அந்நிறுவனம் இந்த நிதியாண்டின் 3வது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.764.43 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20.2 சதவீதம் அதிகமாகும். 

ஏசியன் பெயிண்ட்ஸ்

2019 டிசம்பர் காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான ஒட்டு மொத்த வருவாய் ரூ.5,420.28 கோடியாக உயர்ந்தது. இது 2018 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.5,263.04 கோடியாக இருந்தது.

ஏசியன்  பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 0.17 சதவீதம் குறைந்து 1,775.30ஆக இருந்தது.