பெப்சி கலைஞர்களுக்கு உதவிய திரைத்துறையினருக்கு நன்றி – ஆர். கே. செல்வமணி

 

பெப்சி கலைஞர்களுக்கு உதவிய திரைத்துறையினருக்கு நன்றி – ஆர். கே. செல்வமணி

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரைத்துறையைப் பொறுத்தவரையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக  பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தயாரிப்பாளர்கள் , நடிகர்கள் , இயக்குநர்கள் வேளை சோற்றுக்குக் கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேருக்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனால் நடிகை,நடிகர்கள் அவர்களால் முடிந்ததை நிவாரணமாக வழங்கினர்.

RK selvamani

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே. செல்வமணி, “மக்கள் சிரமப்பட்டாலும் தற்போது 144 தடை உத்தரவை பின்பற்றி வீட்டின் உள்ளேயே இருக்கின்றனர். அது வரவேற்கத்தக்கது. மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்தில் அனைத்து விதமான திறமை வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். அதனால் அரசிற்கு எங்கள் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.

இதுவரை 2 கோடியே 45 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் வந்துள்ளன. திரைத்துறையை சார்ந்த பல்வேறு தரப்பினர் கொடுத்த நிதிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திரைத்துறையினர் அரசிற்கு நன்கொடை கொடுக்க வேண்டும் என்பது கடமை, ஆகவே ரூ.10,25,000 கொடுத்துள்ளோம்” எனக் கூறினர்,