பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு

 

பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு

நாட்டிங்காம்: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 269 ரன்களை இங்கிலாந்து இலக்காக நிர்ணயித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன. முதல் ஒருநாள் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இந்தியாவின் குல்தீப் யாதவ் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். அட்டகாசமாக பந்துவீசிய அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 53 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களும், ஜேசன் ராய் 38 ரன்களும், ஜானி பெரஸ்டோ 38 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.