பெண் பார்க்க வந்தார்கள் -போலீசுக்கு போனார்கள் -கல்யாண ஏற்பாட்டில் நடந்த கலவரம்

 

பெண் பார்க்க வந்தார்கள் -போலீசுக்கு போனார்கள் -கல்யாண ஏற்பாட்டில் நடந்த கலவரம்

ஒரு பெண்ணை திருமணம் பேசி முடித்து விட்டு ,திடீரென கல்யாணத்திற்கு மறுத்த மாப்பிளை வீட்டினர் மீது பெண் வீட்டார் போலீசில் புகார் கூறியுள்ளார்கள்.

பெண் பார்க்க வந்தார்கள் -போலீசுக்கு போனார்கள் -கல்யாண ஏற்பாட்டில் நடந்த கலவரம்

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வாடா தாலுகாவில் வசிக்கும் ஒரு 18 வயதான பெண்ணுக்கு அவரின் குடும்பத்தார் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள் .அதனால் அவர்கள் அந்த பெண்ணுக்கு   பிவாண்டியைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய பேசி முடிவெடுத்தார்கள் .அதன் பிறகு அந்த மணமகன் வீட்டார் அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்கள் .

இதன் காரணமாக அந்த பெண் வீட்டார் ,மணமகன் வீட்டாரை தங்களின் இல்லத்திற்கு வரவைத்து குங்குமம் கொடுக்கும் விழாவினை நடத்த ஏற்பாடு செய்தார்கள் .கடந்த வாரம் நடந்த இந்த  குங்குமம் கொடுக்கும் விழாவிற்கு மாப்பிளை வீட்டை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் .அதன் பிறகு அந்த விழா முடிவடைந்ததும் மணமகன் வீட்டார் கோபமாக எந்த  பதிலும் சொல்லாமல் ,நிச்சயதார்த்த தேதியை குறிக்காமல் சென்று விட்டார்கள் .

இதனால் பெண்னின் வீட்டார் குழப்பமடைந்து மணமகன் வீட்டாரிடம் இது பற்றி கேட்டார்கள் .அதற்கு அவர்கள் தாங்கள் நடத்திய குங்குமம் கொடுக்கும் விழாவை சிறப்பாக செய்யவில்லையென்று கூறி இந்த திருமணத்தை நிறுத்துவதாக கூறியுள்ளார்கள் .இதனால் பெண் வீட்டார் மிகவும் கோபமடைந்தார்கள் அவர்களின் சம்ப்ரதாயப்படி பெண்ணுக்கு குங்கும விழாவை நடத்தியதால், இனி வேறு மாப்பிள்ளைக்கு நிச்சயம் செய்ய முடியாது என்று கூறினார்கள் ,அதனால் அவர்கள் போலீசில் அந்த மாப்பிளை வீட்டினர் மீது புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

பெண் பார்க்க வந்தார்கள் -போலீசுக்கு போனார்கள் -கல்யாண ஏற்பாட்டில் நடந்த கலவரம்