பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு அப்பாவி இல்லை: பாஜக மகளிரணி தலைவி நக்கல்!

 

பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு அப்பாவி இல்லை: பாஜக மகளிரணி தலைவி நக்கல்!

பாலியால் ரீதியாகத் தவறாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவி இல்லை என மத்தியப் பிரதேச பாஜக மகளிரணி தலைவி லதா கெல்கர் பேசியுள்ளார்.

போபால்: பாலியால் ரீதியாகத் தவறாக பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அப்பாவி இல்லை என மத்தியப் பிரதேச பாஜக மகளிரணி தலைவி லதா கெல்கர் பேசியுள்ளார்.

பெண்களுக்குத் தனிமையில் நேரும் பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மிடூ ஹேஸ்டேக் மூலம் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச மாநில பாஜக மகளிரணித் தலைவி லதா கெல்கர், “மிடூ பிரச்சாரத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், ஒரு ஆண் தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு பெண் பத்திரிகையாளர்கள் அவ்வளவு அப்பாவிகள் இல்லை” என நக்கலாக பேசியுள்ளார்.

ஏற்கனவே, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த லதாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.