பெண் பக்தரைக் கன்னத்தில் அறைந்து தாக்கிய தீட்சிதருக்கு முன்ஜாமீன் !

 

பெண் பக்தரைக் கன்னத்தில் அறைந்து தாக்கிய தீட்சிதருக்கு முன்ஜாமீன் !

‘பெயரைக் கூட கேட்காமல் அர்ச்சனை செய்து விட்டீர்கள்’ என்று லதா அர்ச்சகரைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த அர்ச்சகர் ” ஏன் நீ தான் வந்து அர்ச்சனை செய்யேன்” என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கு லதா என்ற செவிலியர் சென்றுள்ளார். அப்போது, அர்ச்சனை கூடையை வாங்கி கொண்ட அர்ச்சகர் உடனே வெளியே வந்துள்ளார். அதற்கு, ‘பெயரைக் கூட கேட்காமல் அர்ச்சனை செய்து விட்டீர்கள்’ என்று லதா அர்ச்சகரைக் கேட்டுள்ளார். அதற்கு அந்த அர்ச்சகர் ” ஏன் நீ தான் வந்து அர்ச்சனை செய்யேன்” என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். 

ttn

லதாவுக்கும் அர்ச்சகர் தர்ஷனுக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அர்ச்சகர் லதாவைக் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இது குறித்து, செவிலியர் லதா சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அர்ச்சகர் தர்ஷனை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த தீட்சிதர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கோவில் நடையை மூடும் போது அந்த பெண் வந்து தகராறு செய்ததாகவும் தற்காப்புக்காக அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டதாகவும் காவல் துறையினர் தன் மீது பொய் வழக்குப் போட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ttn

அந்த மனுவைக் கடந்த மாதம்27 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக அரசு பதிலளிக்கும் படி உத்தரவிட்டு மனு விசாரணையை ஒத்தி வைத்தது. அதன் பின்னர், இன்று மீண்டும் அந்த மனு விசாரிக்கப்பட்டது. அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரைத் தாக்கிய தீட்சிதர் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.