பெண் சுதந்திரம் பற்றிய தனது கருத்தை தெரிவித்த வித்யா பாலன்!

பெண் சுதந்திரம் பற்றிய தனது  கருத்தை தெரிவித்த  வித்யா பாலன்!

தனது வித்தியாசமான நடிப்பு, தேரந்தெடுத்த கதாபாத்திரங்கள் மூலம் பாலிவுட்டில் தனெக்கென்று தனி முத்திரை பதித்தவர் வித்யா பாலன். 
இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

vidya

ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற வித்யா பாலனிடம், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப் பற்றி அவரது கருத்துக்களைக் கேட்டபோது, ​​”ஆண் மையப்படுத்தப்பட்ட படத்தில் எப்போதும் ஆண்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெண்கள் மையபடுத்தப்பட்ட படத்தில் பெண்கள் மைய கதாபாத்திரங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலும் நாம் அப்படி தான் செய்து கொண்டிருக்கிறோம். அதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை”. 

vidya

மேலும் பேசிய அவர் “பெண்கள் மையப்படுத்தப்பட்ட எல்லா படங்களிலும் பெண்ணியம் பேசப்படுவதில்லை. ஆனால் உண்மையில் பெண்ணியவாதி என்றால் என்ன என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நான் இதைச் சொல்கிறேன், ஏனென்றால் நாடு முழுவதும் பயணம் செய்வதற்கும் மக்களுடன் பழகுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. உண்மையில் அதிகாரம் மற்றும் பெண் சுதந்திரம் என்றால் என்ன என்பதை நான் காலப்போக்கில் உணர்ந்தேன். இவை அனைத்தும் நீங்கள் எந்த சூழலில் இருந்து வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. ஒரு கிராமத்துபெண் நகரத்தில் ஒரு பணியில் பெரிய பொறுப்பில் இருப்பதும் பெண்கள் முன்னேறி வருவதான ஒரு படியாக தான் பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

vidya balan

வித்யா பாலன் ‘சகுந்தலா தேவி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  இது ஒரு வாழ்க்கை வரலாற்று படம். இந்த படத்தில் சகுந்தலா தேவியாக  நடிக்கிறார். சகுந்தலா தேவி “மனித கணினி” என்று அழைக்கப்பட்டவர்.